செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

நீ



அன்புக்கு இலக்கணம் நீ..........................

அறிவுக்கு ஆரம்பம் நீ...........................

அமைதிக்கு அஸ்திவாரம் நீ...................

அகிலத்துக்கு அடித்தளமும் நீ........................


இன்பத்தின் இன்னிசை நீ..........................

துன்பத்தின் துடைப்பமும் நீ....................

இரவுகளில் தாலாட்டு நீ.........................

இதயத்தின் உயிர் நாடியும் நீ..............


நம்பிக்கையின் நல் வடிவம் நீ......................

நாளையின் நந்தவனமும் நீ.....................

நட்சத்திர நாதம் நீ.....................

என் நாடித்துடிப்பின் இசை கூட....................

நீதானே அம்மா............................

நட்பு



நட்பு என்பது வெறும் மூன்றெழுத்துச் சொல்லல்ல..........

அது மூச்சு உள்ளவரை மனதில் முடிச்சுப்

போட்டு வைக்க வேண்டிய பொக்கிஷம்..............

தொலைந்துவிட்டால் தேடுவது கடினம்.............

தொலைக்காவிட்டால் பிரிவது கடினம்................

ஆகவே, அதைப் பத்திரமாக...................

மனது எனும் மக்கள் வங்கியில்..........

மடித்து வை...................

எத்தனை வருடங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்...............

ஆனால்............................கடந்த கால வட்டிகளோடு..........................

நிஜம்



நிழல்கள் என்றுமே நிஜங்களை அடைவதில்லை............

ஆனால் நிழல்கள் தான் நிஜமானது..............

நிஜங்கள் எப்போதும் நிழல்களே...........

உண்மை என்னவென்றால் ..................

வாழ்க்கை என்பது நிஜம்................

வாழ்ந்து கொண்டிருப்பது நிழல்.........

இதுதான் நிஜத்தின் நிழல்..........

வாழ்க்கையும் அதுவே................

காத்திருக்கிறேன் .........


சுழலும் இந்த உலகில்

சுவாசம் இல்லாத உயிராக........

சுருக்கிடப்பட்டது என் வாழ்வு !


சுகமான உன் நினைவுகளுடன் ......

சுற்றித்திரியும் என் இதயம் .....

உன் வருகைக்காக

காத்துக்கொண்டிருக்கின்றது......

நீ என் வாழ்க்கை!




நீ இல்லாத ஒரு வாழ்வு .......
நீரில்லாமல் வாழும் ஒரு மீனின் போராட்டம்.......
என் வாழ்வின் சுவாசம் நீ........
என் கண்களில் கண்மணி நீ.........


என் வார்த்தையில் வசந்தம் நீ................
என் பார்வையில் ஒளி நீ ...........
என் பாதையில் வழி நீ .............
என் எழுத்துக்களில் எல்லாமே நீ .............
என் கனவுகளில் வண்ணம் நீ ...........
என் நினைவுகளில் நித்தமும் நீ ...............
என் மௌனத்தில் வார்த்தை நீ ..............
என் காலையில் சூரியன் நீ ................
என் மாலையில் நித்திரை நீ ................
என் புன்னகையில் புதிராக நீ .............
என் சுவாசத்தில் சுவடுகள் நீ ...
என் இதயத்தில் இறக்கும் வரை நீ ........... நீயேதான் ............
என் இறுதி மூச்சு கூட நீ ................ ஆனால் ..............
என்றும் உனக்காகவே உயிர் வாழும் ...........
ஓர் உருகிய மெழுகுவர்த்தியாக நான்..................

விதி


மழைக்காலங்கள் என் மனக்கோலங்களை வரையும் வேலை .............
மலர்ச்சோலைகள்
என் மனதோடு ........ உரையாடும் வேலை ..............
நான்
மட்டும் மௌனமாக...............
நிமிடங்கள்
எல்லாம் நிற்காமல் ஓட ......... என் நிம்மதி மட்டும் நிறம் மாறுகிறதே...................... மலர்கள் வாடி மண்ணாவது போல .......... என் மனமும் வரையாத ஓவியமாகிறதே................. வார்த்தைகளும் வண்ணம் இழக்க............... என் வாழ்க்கையும்......... எண்ணங்களோடு மட்டும்....... மலராத மல்லிகையாக.......மறைந்து விடுமோ?
மணிக்கணக்கில் யோசிக்கிறேன்..........ஆனால்........... விடை மட்டும் விதியின் கையில்................!!!!!

எச்சரிக்கை!



காதலை கையில் ஏந்தும் முன்....... கண்ணீரைக் கப்பமாக வாங்கி விடுங்கள்..... அப்போதுதான் கவலையை கடிவாளமிட்டு வைக்கலாம் ....

வலி



கனவுகள் காண்பதற்கு
என்
கண்களை கடன் வாங்கினாய்......
கடைசியில்
காயங்களை மட்டும்
கண்ணீராக
கலந்து விட்டாய்!

என்
இதயத்தை இரவல் வாங்கி
இருட்டறை
யாக மாற்றி விட்டாய்.....
இரவு
பகல் தேடியும்
இமைகள்
இன்னும் மூடாமல்!

உன்
வார்த்தையை நம்பி
என்
வாழ்க்கையை வரைந்து விட்டேன் .....
ஆனால்
, வண்ணங்கள் மட்டும்
எண்ணங்களில்
இல்லை!
காற்றாக
உன்னையே சுவாசிக்கிறேன்
கவிதையாக
உன்னையே எழுதுகிறேன்
என்
கண்ணீரை உனக்கே பரிசளிக்கிறேன்
கடைசி
வரை உனக்காகவே உயிர் வாழ்வேன்......

என்
வாழ்வை வளமாக்க ....
வானவிலாக
நீ வர வேண்டும்!
வருவாயா
?

தனியே ........


என் வலி எனக்கு மட்டும் தான் தெரியும் 
நான் அழுவது உனக்காக அல்ல ........ 
நான் சிரிப்பதும் உனக்காக அல்ல..........
எல்லாம் எனக்காக மட்டுமே........
என்னை நான் மறக்க வேண்டும்.........
நீ என்னை மறக்க முன்........
என்ன வாழ்க்கை திசை இல்லாமல் ......
திரிந்து கொண்டு இருக்கின்றது ........
எனக்கு மட்டும் ஏன் இந்த விதி.....
என் வாழ்வின் பாதை எனக்கே புரியவில்லை........

மாற்றம்


அர்த்தமில்லாமல் பிரிந்து செல்வது 
ஆண்களுக்கு அழகாக இருக்கலாம்..........  
ஆனால், அர்த்தமே நீதான் என்றிருக்கும்  
பெண்களுக்கு இது அமாவாசைதான்..... 
ஒவ்வொரு வினாடியும் வினாக்களைக் கேட்டால்..... 
விடை சொல்ல வினாடிகளை எங்கே தேடுவது?  
விசித்திரமான உன் கொள்கைக்கு 
வித்தியாசம் காண என்னால் முடியாது......  
வெளி உலகிற்கு நீ ஒரு வெள்ளிக் கிண்ணமாக இருக்கலாம்.....
ஆனால், காதலை கனங்களில் மாற்றிக்கொள்ள  
நான் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணல்ல............

நினைவுகள்


கைகளில் காயங்களை ஏற்படுத்திக்கொண்டால் மட்டும்....
கனவுகள் தொடர்வதையும்....
கண்களில் கண்ணீரையும்
கடைசி கரை தொடரும் கடினமான கவலைகளையும்
கடிவாளமிட்டு வைக்க முடியாது தோழி............
கடந்த கால நினைவுகள் கசப்பாக இருந்தாலும்.....
பொறுமையுடன் காத்திருப்பதே
காதலுக்கு அழகு..........
பதினெட்டு வயதில் வந்த காதலை விட.....
பத்து மாதங்கள் சுமந்த தாயின் பாசமே மேல்.....உண்மையானதும் கூட....
இடையில் வந்த ஒருவனை விட
இடை விடாது எம்மக்கு அன்பைப் பொழியும் தந்தையின்
அளவிட முடியாத அன்பே மேல்.....
எவனோ ஒருவனுக்காக எம்மை நாம் வருத்திகொல்வது
எம் பெற்றோருக்கு நாம் செய்யும் பாவம் தானே....
உடலில் இருந்து வரும் ஒவ்வொரு துளி இரத்தமும்
அவன் தந்தது இல்லை..... அது சிந்தும் போது கூட
மருந்து போடா எவரும் வர மாட்டார்கள்.....
நம் பெற்றோர்களை தவிர......
நாம் எம்மைக் காயபடுத்துவதாக நினைத்து
எம் பாசமிகு ஜீவன்களை தான் படுத்துகிறோம் பாடு......
இனிமேலும் வேண்டாம் இந்த இரத்தம் சிந்தும் வேலை....
உண்மையான காதல் என்றுமே உயிரோடு தான் இருக்கும்.....

நம் உடம்பில் உயிர் போகும் வரை...... உறைந்து விடாது ..............

காதல்


எல்லோரும் சொல்கிறார்கள்
கண்டதும் காதல்
கண்களில் காதல்
கவிதையில் காதல் என்று
காதலை கண்மூடித்தனமாக
கண்டு சொல்கிறார்கள்......
ஆனால்.....
நிஜமான காதல்
எம் நிழலாக வரும்
நிறுத்திவிட முடியாத
ஒரு நினைவின் காவியம் என்பதை
யாருமே அறிவதில்லை......

பதில்


நீ தந்த நினைவுகளுக்கும்
நீ வந்த பாதைகளுக்கும்
நீ சொன்ன வார்த்தைகளுக்கும்
நீ இருந்த நிமிடங்களுக்கும்
நீ தந்த காயங்களுக்கும்
இன்று என் கண்கள் பதில் சொல்கின்றது .....
கண்ணீரில் ...........

அன்பு

என் அழுகையின் அர்த்தம் கூட
என் அளவு கடந்த அன்பு தான்......
அதுவும் உனக்காக மட்டும்
அழியாது அலைந்து கொண்டிருக்கும்
அற்புதமான அன்பு.....
நீ இல்லாத ஒரு வாழ்வு
எனக்கு வேண்டவே வேண்டாம்......
என் சோகங்களுக்கு
எப்பொழுதும் முற்றுப்புள்ளியே இல்லையடா.....

காதலர் தினம்

கண்களால் பேசி
கனவுகளை சுமந்து
காற்றலையில் உரையாடி
கைகளை கோர்த்து
கவிதைகளைக் கடந்து
கற்பனைகளை  வைத்து
காலம் உள்ளவரை காதலுடனும்
கடைசிவரை கல்லறை வரையும்
என்று  உண்மையாக உரைத்துக்கொண்டிருக்கும்
உயிருள்ள ஜீவன்களுக்கு
இனிய காதலர் தின வாழ்த்துகள்.........

நீ தான்.... !!!


நான் பார்க்கும் போது ............
நீ தான் என் கண்கள் !!
நான்  பேசும் போது...........
நீ தான் என் மௌனம் !!
நான் உறங்கும் போது .............
நீ தான் என் கனவு !!
நான் விழிக்கும் போது ............
நீ தான் என் விடியல் !!
வான் எழுதும் போது ..........
நீ தான் என் கவிதை !!
நான் இருக்கும் வரை ...........
நீ தான் என் புன்னகை !!
நான் இசைக்கும் போது .............
நீ தான் என் பாடல் !!!
நான் நடக்கும் போது ..........
நீ தான் என் பாதை !!!
நான் நினைக்கும் போது ......
நீ தான் என் மனதில் !!!
நான் உயிர் வாழும் போது ......
நீ தான் என் சுவாசம் !!
நான் இறக்கும் போது .......
நீ தன என் கல்லறை.......!!!
கடைசி வரை நீ தான் எனக்கு எல்லாமே.....!!!

 

புரியவில்லை .........

என் கண்களில் பார்வையான நீ ... 
என் பார்வையில் ஒளியான நீ...  
என் ஒளியில் வழியான நீ..
என் வழியினில் வார்த்தையான நீ... 
என் வார்த்தையில் வசந்தமான நீ...  
என் வசந்தத்தில் நினைவான நீ...  
என் நினைவுகளில் நிரந்தரமான நீ... 
ஏன் என் உயிரினில் மட்டும் பிரிவாக மாறி விட்டாய்?

ரசிக்கிறேன்...


நன் கவிதைகளை ரசிக்கிறேன்
உன்னக்காக எழுதும் போது மட்டும்....

நான் என் கனவுகளை ரசிக்கிறேன்

நீ என் கண்களில் கண்ணீராகும் போது மட்டும்

நான் வலிகளை ரசிக்கிறேன்

நீ என் விழிகளில் வரும் போது மட்டும்
நான் என் இதயத்தை ரசிக்கிறேன்
அது உனக்காக மட்டுமே துடிப்பதற்காக.....
நான் என் இமைகளை ரசிக்கிறேன்
மூடும் போதும் நீ வந்து செல்வதால்.....
நான் என்னையே ரசிக்கிறேன்
உன்னுடன் உரையாடிகொண்டிருக்கும் போது மட்டும்...

வாழ்க்கையும் வார்த்தைகளும்

உன் ஒவ்வொரு வார்த்தைகளும்
என் வாழ்க்கையின் அர்த்தங்களாகின
என் வாழ்க்கையின் அர்த்தமே நீயான போது
அதில் உன் வார்த்தைகள் மட்டும்
என் வாழ்க்கையானது ஒரு வரம்தான்....
என் வாழ்க்கையும் உன் வார்த்தைகளில் தான்
வண்ணமாகியது......
இன்று வறண்டும் போகிறது......