செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

நினைவுகள்


கைகளில் காயங்களை ஏற்படுத்திக்கொண்டால் மட்டும்....
கனவுகள் தொடர்வதையும்....
கண்களில் கண்ணீரையும்
கடைசி கரை தொடரும் கடினமான கவலைகளையும்
கடிவாளமிட்டு வைக்க முடியாது தோழி............
கடந்த கால நினைவுகள் கசப்பாக இருந்தாலும்.....
பொறுமையுடன் காத்திருப்பதே
காதலுக்கு அழகு..........
பதினெட்டு வயதில் வந்த காதலை விட.....
பத்து மாதங்கள் சுமந்த தாயின் பாசமே மேல்.....உண்மையானதும் கூட....
இடையில் வந்த ஒருவனை விட
இடை விடாது எம்மக்கு அன்பைப் பொழியும் தந்தையின்
அளவிட முடியாத அன்பே மேல்.....
எவனோ ஒருவனுக்காக எம்மை நாம் வருத்திகொல்வது
எம் பெற்றோருக்கு நாம் செய்யும் பாவம் தானே....
உடலில் இருந்து வரும் ஒவ்வொரு துளி இரத்தமும்
அவன் தந்தது இல்லை..... அது சிந்தும் போது கூட
மருந்து போடா எவரும் வர மாட்டார்கள்.....
நம் பெற்றோர்களை தவிர......
நாம் எம்மைக் காயபடுத்துவதாக நினைத்து
எம் பாசமிகு ஜீவன்களை தான் படுத்துகிறோம் பாடு......
இனிமேலும் வேண்டாம் இந்த இரத்தம் சிந்தும் வேலை....
உண்மையான காதல் என்றுமே உயிரோடு தான் இருக்கும்.....

நம் உடம்பில் உயிர் போகும் வரை...... உறைந்து விடாது ..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக