
கனவுகள் காண்பதற்கு
என் கண்களை கடன் வாங்கினாய்......
கடைசியில் காயங்களை மட்டும்
கண்ணீராக கலந்து விட்டாய்!
என் இதயத்தை இரவல் வாங்கி
இருட்டறையாக மாற்றி விட்டாய்.....
இரவு பகல் தேடியும்
இமைகள் இன்னும் மூடாமல்!
உன் வார்த்தையை நம்பி
என் வாழ்க்கையை வரைந்து விட்டேன் .....
ஆனால், வண்ணங்கள் மட்டும்
எண்ணங்களில் இல்லை!
காற்றாக உன்னையே சுவாசிக்கிறேன்
கவிதையாக உன்னையே எழுதுகிறேன்
என் கண்ணீரை உனக்கே பரிசளிக்கிறேன்
கடைசி வரை உனக்காகவே உயிர் வாழ்வேன்......
என் வாழ்வை வளமாக்க ....
வானவிலாக நீ வர வேண்டும்!
வருவாயா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக